பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் இலவச சாப்பாடு: சத்தீஸ்கரில் புதுமை திட்டம் அறிமுகம்

பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் இலவச சாப்பாடு: சத்தீஸ்கரில் புதுமை திட்டம் அறிமுகம்
Updated on
1 min read

ராய்ப்பூர்

சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகா பூர் மாநகராட்சியில் ‘கார்பேஜ் கஃபே’ (‘Garbage cafe’) என்ற பெயரில் உணவகம் தொடங்கப் பட்டுள்ளது. இங்கு பிளாஸ்டிக் கொண்டு வருவோருக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் அஜய் திர்கி கூறும்போது, “ஒரு கிலோ பிளாஸ்டிக் கொண்டு வருவோருக்கு நாங்கள் இலவச உணவு கொடுக்கிறோம். நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள இது எங்களுக்கு உதவியாக உள்ளது” என்றார்.

ஒரு கிலோ பிளாஸ்டிக் கொண்டு வருவோருக்கு மதிய உணவும் அரை கிலோ பிளாஸ்டிக் கொண்டு வருவோருக்கு காலை உணவும் இங்கு இலவசமாக வழங்கப்படு கிறது. இது குப்பை பொறுக்கு வோர் மற்றும் நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கு உதவியாக உள்ளது. இவர்களுக்கு அடுத்த கட்டமாக குடியிருப்பு ஏற்படுத்தி தரவும் மாநகராட்சி திட்டமிட் டுள்ளது.

அம்பிகாபூர் மாநகராட்சியின் இந்த உணவக திட்டத்திற்காக பட் ஜெட்டில் ரூ.550,000 ஒதுக்கப்பட் டுள்ளது. பிரதமரின் தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதி யாக இத்திட்டம் தொடங்கப்பட் டுள்ளதாகவும், இதன் மூலம் சேக ரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பை கள், சாலைகள் போட பயன்படுத் தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பிகாபூர் மாநகராட்சியின் புதுமை திட்டம் நாட்டுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in