

புதுடெல்லி
மத்திய தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கடந்த 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) இயற்றப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா மக்களவை யில் நேற்று முன்தினம் நிறைவேறி யது. தகவல் ஆணையர்களின் சம்பளம், பதவிக் காலம் உள்ளிட்ட விவகாரங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.
இதுகுறித்து ஐக்கிய முற் போக்குக் கூட்டணி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு நிர்வாகத்தில் வெளிப் படைத்தன்மையை உறுதி செய் வதற்காக, பல்வேறு தரப்பினருடன் நடத்திய தீவிர ஆலோசனைக்குப் பிறகு ஆர்டிஐ சட்டம் நாடாளு மன்றத்தில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 60 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதனால் நமது ஜனநாயகத்தின் அடித்தளம் மேலும் வலுவடைந்துள்ளது.
ஆனால் இந்த சட்டம் தங்களுக்கு தொல்லை தரும் வகையில் இருப்ப தாக இப்போதைய மத்திய அரசு கருதுகிறது. எனவே, இந்த சட் டத்தை நீர்த்துப்போகச் செய்ய அரசு விரும்புகிறது. மத்திய தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பறிக்கவும் விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாகவே ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதாவை மக்களவை யில் நிறைவேற்றி உள்ளது. இத னால் இந்த சட்டம் இப்போது அழிவின் விளம்பில் உள்ளது. பெரும்பான்மை பலத்தால் அரசு இந்த மசோதாவை நிறைவேற்றி விடலாம். இதன்மூலம் மக்களின் அதிகாரம் பறிபோகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ