Published : 24 Jul 2019 08:14 AM
Last Updated : 24 Jul 2019 08:14 AM

நாட்டின் ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு?

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

நாட்டிலுள்ள ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனங்களாக்கி பிறகு, தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்ய இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிப்புக்காக நாடு முழுவதிலும் மத்திய அரசின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயுதங்கள் தயாரிப்பு, 1775-ல் ஆங்கிலேயரால் கொல்கத்தா வில் முதலாவதாக துவக்கப் பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் ஊட்டியின் அரவங் காடு மற்றும் சென்னையின் ஆவடி, உ.பி.யின் கான்பூர், ஒடிசாவின் பொளங்கீர், ம.பி.யின் ஜபல்பூர் உள்ளிட்ட 41 இடங்களில் இந்த தொழிற்சாலைகள் அமைந்துள் ளன. இவற்றை நிர்வாகிக்க ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித் துறையின் கீழ் இயங்கும் இதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச் சகம் நிர்வகிக்கிறது.

இவற்றில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் ஆயுதங்கள் உற்பத்தியில் ’குறிப்பிட்ட தயாரிப்பு கள் மட்டுமே’ எனும் வகையான ஒரு கொள்கை உருவாக்கப்பட்டது. இதனால், பெரும்பாலான தொழிற் சாலைகளில் நடைபெற்று வந்த பல முக்கிய ஆயுதங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன்மூலம், சுமார் 20,000 கோடி ரூபாயாக இருந்த இந்த தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதியாகக் குறைந்து வருகிறது.

இதன் பின்னணியில் அந்த தொழிற்சாலைகளை முதலில் பொது நிறுவனங்களாக மாற்றி பிறகு, தனியார் பெருநிறுவனங் களிடம் தாரைவார்ப்பது மத்திய அரசின் திட்டம் என கூறப்படுகிறது. இதன் மீதான இறுதி முடிவுகள் கடந்த 19-ம் தேதி எடுக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அன்றைய தினம் உற்பத்தித்துறை செயலாளர் அஜய்குமார் மற்றும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி வாரியத்தின் தலைவரான சவுரவ் குமார் ஆகியோரை டெல்லிக்கு அழைத்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். இதன் முடிவுகளை மத்திய அரசு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் எந்நேரமும் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவசரக்காலங்களில் மட்டும் பயன்படுத்தப்படும் விதி எண் 12-ன் கீழ் முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ராணுவ தளவாடங் கள் தொழிற்சாலை வாரிய வட்டா ரங்கள் கூறும்போது, ‘‘தனியார் மயத்திற்கானத் துவக்கக் கட்டப் பணிகள் கடந்த 2015-ல் மெதுவாகத் துவங்கின. பிறகு, 2016-ல் இதன் மீது பல ஆலோசனை கூட்டங்கள் நடந்தபோது தொழிலாளர்களி டையே எதிர்ப்பு கிளம்பியது. ‘ராணுவ தொழிற்சாலை தனியார் மயமாக்கப்படாது என மத்திய அமைச்சர் அளித்த உறுதி மீறப் படுகிறது. 41 தொழிற்சாலைகளுக் கும் சேர்த்து சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் நாடு முழுவதிலும் முக்கிய நகரப்பகுதிகளில் உள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை குறி வைத்தே இந்த தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு தன்னிச்சையாக அமலாக்குகிறது’’ என்று தெரிவித்தன.

இந்த தொழிற்சாலைகளில் சுமார் 90,000 பேர் நேரடியாகவும் சுமார் 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு் பெறுகின்றனர். தனியார்மயமாக்குவதால் இவர் களுக்கும் ஆபத்து ஏற்படும். இதனால், அந்த தொழிற்சாலை களின் சங்கங்கள் வரும் ஆகஸ்ட் 20-ல் நாடு முழுவதிலும் பெரிய அளவிலான போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x