உ.பி.யில் பழங்குடியினர் கொலை விவகாரம்; சர்ச்சைக்குரிய நிலத்தின் ஆவணங்கள் காணவில்லை

உ.பி.யில் பழங்குடியினர் கொலை விவகாரம்; சர்ச்சைக்குரிய நிலத்தின் ஆவணங்கள் காணவில்லை
Updated on
1 min read

சோன்பத்ரா

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் முர்தியா கிராமத்தில் உள்ள நிலத்தை ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்து அந்த கிராமத் தலைவர் யக்யா தத் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மோதலில் பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த ஞாயிறன்று அந்த கிராமத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆறுதல் கூறினார். நிலம் தொடர்பான பிரச்சினைக்கு முன்பு ஆட்சியில் இருந்த தவறான நிலக் கொள்கைகள்தான் காரணம் என்றும் நிலம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், சோன்பத்ரா மாவட்ட கூடுதல் ஆட்சியர் யோகேந்திர பகதூர் கூறுகையில், ‘‘பிரச்சினைக்குரிய நிலம் தொடர்பான 1955-ம் ஆண்டு பத்திரங்கள் காணவில்லை. நிலம் இப்போது இருக்கும் சோன்பத்ரா மாவட்டம் 1989-ம் ஆண்டு வரை மிர்சாபூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்த குறிப்பிட்ட காலத்தில் சில குறிப்பிட்ட பத்திரங்கள், ஆவணங்கள் அழிந்துவிட்டன’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in