Published : 23 Jul 2019 03:27 PM
Last Updated : 23 Jul 2019 03:27 PM

குடியிருப்புகள் கட்டுமான மோசடி வழக்கு: அம்ரபள்ளி குழுமப் பதிவை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

அம்ரப்பள்ளி திட்டத்தில் வீடு வாங்க முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் வாயிலில். | படம்: ஆர்.வி.மூர்த்தி.

அம்ரப்பள்ளி நிறுவனங்கள் குழுமத்தின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு தேசியக் கட்டிடங்கள் மற்றும் கட்டுமானக் கார்ப்பரேஷன் முடிவுறாமல் நிலுவையில் இருக்கும் வீடுகளைக் கட்டித்தருமாறும் உத்தரவிட்டது, இதன் மூலம் 40,000 வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

மேலும், இந்த நிறுவனம் வீடு வாங்கும் கனவில் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த மக்கள் பணத்தை வேறு நிறுவனத்துக்கு மாற்றி நிதிமுறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அமலாக்கப்பிரிவு விசாரணை மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நொய்டா அதிகாரிகளையும் உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. வீடு வாங்குவோர் பணம் அபகரிக்கப்பட்ட போது துரிதமாக ஏன் விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடிந்து கொண்டது. இந்தக் குழுமம் சட்டவிரோதமாக மக்கள் பணத்தை காலி செய்த போது ஏன் துரித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியது உச்சநீதிமன்றம். 

நிறுவன இயக்குநர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டிய பிறகு இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.  டெல்லி போலீஸ் துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் உதவி ஆணையர் இயக்குநர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோரியிருந்த மனுவை அடுத்து இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

இந்த நிறுவனம் மக்கள் பணத்தை வீடு கட்டித்தருகிறோம் என்று வாங்கி வேறு நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக மாற்றியுள்ளது மிகவும் சீரியசான மோசடி ஆகவே இந்த வழக்கில் பொறுப்பான விசாரணை தேவை என்பதையும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான மக்கள் பணம் அம்ரபள்ளி குழுமத்திலிருந்து கவுரிசுதா உள்கட்டமைப்பு தனியார் நிறுவனத்துக்கு கைமாறியதாக தடயவியல் தணிக்கையாளர்கள் ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x