Published : 23 Jul 2019 01:09 PM
Last Updated : 23 Jul 2019 01:09 PM

2 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாக தலா ரூ.10 லட்சம்: சொந்த கிராம மக்களுக்கு அரசு பணத்தை வழங்கும் தெலங்கானா முதல்வர்

 

ஹைதராபாத், ஏஎன்ஐ

 

என்னுடைய சொந்த கிராமத்தில் உள்ள 2 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்தை எனது அரசு இலவசமாக வழங்கும் என்று தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

 

தெலங்கானா மாநிலத்தில் 2-வது முறையாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியில் இருக்கிறது. அங்கு முதல்வராக டிஆர்எஸ் கட்சியின் தலைவர், கே.சந்திரசேகர ராவ் 2-வது முறையாக இருந்து வருகிறார். இவரின் பிறந்த ஊர் சிந்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிந்தாமடகா கிராமம்.

 

சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து, படித்து தற்போது கட்சியின் தலைவராகவும், மாநிலத்தின் முதல்வராகவும் சந்திரசேகர ராவ் உயர்ந்துள்ளார். தன்னுடைய முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்த கிராம மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் சந்திரசேகர ராவ் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஒரு அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

 

அந்த அறிவிப்பில் கிராம மக்களின் வறுமை, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், கிராமத்தில் உள்ள 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் கே.சிஆர் அறிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இது குறித்து முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் " நான் பிறந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஏராளமான நல்ல தி்ட்டங்களைச் செய்ய நினைக்கிறேன். அந்த வகையில், கிராமத்தில் உள்ள 2 ஆயிரம் குடும்பங்களுக்கு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் இலவசமாக வழங்கப் போகிறேன். இதற்கான ஒப்புதலையும் உடனடியாக வழங்க இருக்கிறேன். இந்த கிராம மக்கள் ஆதரவு இல்லாமல் நான் முதல்வராக வந்திருக்க முடியாது.

 

அதுமட்டுமல்லாமல், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொந்தமாக வீடு கட்டித் தரப்படும். பாதாள சாக்கடை தி்ட்டம், இலவச சுத்தமான குடிநீர் வசதி, மிகப்பெரிய மீட்டிங் ஹால் போன்றவற்றைச் செயல்படுத்த இருக்கிறேன். இந்த திட்டப் பணிகள் அனைத்தும் அடுத்த 6 மாதங்களில் முடியும். என்னுடைய கிராமம் இந்த நாட்டில் முன்மாதிரியாக இருக்கும்.

 

நான் வழங்கும் ரூ.10 லட்சத்தை மக்கள் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம். விவசாயத்தில் முதலீடு செய்யலாம், உழவுக்குத் தேவையான கருவிகள் வாங்கலாம், வீடு கட்டலாம் எந்த விஷயத்துக்கும் தடையில்லை’’.

இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x