

நியூயார்க்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020-21 நிதி ஆண்டில் இருந்து 8 சதவீத வளர்ச்சியை அடையும் என நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறினார்.
நாட்டின் முக்கிய அமைப்பாகக் கருதப்படும் நிதி ஆயோக் அமைப் பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் ஐக்கிய நாடுகள் சபை தலை மையகத்தில் நடைபெற்ற நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் தொடர் பான கூட்டத்தில் கலந்து கொண் டார். அங்கு சென்றிருந்தவர் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதர கத்தில் இந்தியாவில் முதலீடுகள் குறித்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் என்ற நிலையிலிருந்து 8 சதவீதத்தைத் தாண்டிய அளவுக்கு உயரும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு சீர்திருத்தங்களின் பலன்கள் பொருளாதாரத்தில் தெரிய ஆரம்பித்துள்ளன.
5 லட்சம் கோடி டாலர் பொருளா தாரமாக இந்தியாவை மேம்படுத் தும் இலக்கு எட்டப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் இந்தியா கொண்டுள்ளது. 2020-21 நிதி ஆண்டு முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தைத் தாண்டும். அதற்கான அடிக்கல்தான் ஜிஎஸ்டி, திவால் சட்டம் போன்ற சீர்திருத்தங்கள். இந்த சீர்திருத்தங்கள் பொருளா தாரத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியா வின் வளர்ச்சி மேல்நோக்கி செல் வதற்கான நேரத்துக்காகக் காத் திருக்கிறது. இரண்டு இலக்க வளர்ச் சியை எட்டவும் வாய்ப்புள்ளது என்றார்.
அதேசமயம் வேலைவாய்ப்பு கள் குறித்து பேசுகையில், இந்தியா வில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனா லும், அவற்றின் தன்மை மற்றும் தரம் என்பது விவாதத்துக்குரியது என்பதையும் அவர் ஒப்புக் கொண் டார். இளைஞர்களுக்கான தரமான, சரியான வேலைவாய்ப்புகளை ஒழுங்குபடுத்த முதலீடுகள் அவசியம். உள்நாட்டு முதலீடுகள் மட்டுமல்லாமல் அந்நிய முதலீடுகளும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
முதலீடுகளை அதிகரிப்பதற் கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. எனவே இந்தியா தனது முழு செயல்திறனையும் வெளிப்படுத்தும் காலம் விரைவில் வரவுள்ளது என்று அவர் கூறினார்.