Published : 23 Jul 2019 09:50 AM
Last Updated : 23 Jul 2019 09:50 AM

விங் கமாண்டர் அபிநந்தனை மையமாக்கி ‘மொபைல் கேம்’ வெளியிடுகிறது விமானப்படை

புதுடெல்லி

விங் கமாண்டர் அபிநந்தனை முக்கிய கதாபாத்திரமாக்கி, முதல் முறையாக மொபைல் கேம் ஒன்றை இந்திய விமானப் படை வெளியிட உள்ளது. அதற்கான ‘டீசர்’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பின் பிப்ரவரி 26-ம் தேதி அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய போர் விமானங் கள் பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது குண்டு கள் வீசி தாக்குதல் நடத்தின. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலின் போது இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த விங் கமாண்டர் அபிநந்தனை, பாகிஸ் தான் ராணுவம் சிறைபிடித்தது. அதன்பின் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக அவரை பாகிஸ்தான் அரசு விடுவித்தது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அபிநந்தனின் தேசப்பற்று, அவரது மீசை ஆகியவை மிகவும் பிரபல மாயின.

இந்நிலையில், மக்களிடம் தேசப்பற்றை ஊக்குவிக்கவும், விமானப் படையில் இளைஞர்கள் சேர்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அபிநந்தனை முக்கிய கதாபாத்திரமாக்கி இந்திய விமானப் படை முதல் முறை யாக மொபைல் கேம் ஒன்றை உரு வாக்கி உள்ளது. அந்த விளை யாட்டின் டீசரை விமானப் படை நேற்றுமுன்தினம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விமானப் படையின் மொபைல் கேமை (ஐஏஎப் கேம்) வரும் 31-ம் தேதி முதல் ஆண்ட்ராய்ட், ஐபோன் களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விளை யாட்டை தற்போது ஒருவர் மட்டுமே விளையாட முடியும். அடுத்தகட்ட மாக பலர் சேர்ந்து விளையாடும் வகையில் மொபைல் கேம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

விமானப் படையில் உள்ள போர் விமானங்கள், ஹெலிகாப்டர் கள், விமானிகளின் செயல்பாடு கள், வானிலேயே போர் விமானத் துக்கு எரிபொருள் நிரப்புவது, எதிரி களிடம் சண்டையிடுவது, குண்டு கள் வீசுவது போன்ற சாகசங் கள் நிறைந்ததாக இந்த மொபைல் கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளுடன் நமது விமானப் படை வீரர்கள் சண்டையிடுவதை நேரில் பார்ப்பது போன்ற அனு பவத்தை இந்த விளையாட்டு ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x