

புதுடெல்லி
ராணுவத்தில் பணியாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளது.
தோனி, ராணுவத்தில் பாராசூட் ரெஜிமெண்ட்டில் இரண்டு மாதம் பயிற்சி பெற அனுமதி தருமாறு ராணுவ தளபதி பிபின் ராவத்திடம் அண்மையில் ஒப்புதல் கேட்டிருந் தார். தோனி, ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியை 2011-ம் ஆண்டு முதல் வகித்து வருகிறார். தோனி பயிற்சி பெறவுள்ள படைப்பிரிவு, பயிற்சியின் ஒரு பகுதியை காஷ் மீரில் நடத்தவுள்ளது.
இங்கு பயிற்சி பெறுவதற்குத் தான் பிபின் ராவத்திடம் தோனி அனுமதி கேட்டிருந்தார். அந்த அனுமதி தற்போது வழங்கப்பட் டுள்ளது. இதனால் தோனியும் காஷ்மீரில் பயிற்சி மேற்கொள்வார் என்றே தெரிகிறது. பாராசூட் ரெஜிமெண்ட் படைப்பிரிவிலேயே தோனி பயிற்சியைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி விரைவில் மேற்கிந்தியத் தீவு களுக்குச் சென்று ஒருநாள், டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் தோனி பங்கேற்க வில்லை. அடுத்த 2 மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகி யிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) அவர் தெரிவித்துவிட்டார். ராணுவத்தில் பயிற்சி பெறுவதற் காகவே அவர் அணியில் இடம் பெற இயலாது என்று தெரிவித் திருந்தார்.
இந்நிலையில் தோனி, ராணுவ வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு, மற்ற வீரர்களை போலவே இருப் பார் என்று ராணுவ வட்டாரங் கள் தெரிவித்தன. அதே நேரத்தில் தோனி பயிற்சியில் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும், ராணுவம் நடத்தும் தேடுதல் வேட்டை போன்ற ஆபரேஷன் களில் பங்கேற்க முடியாது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2015-ம் ஆண்டில், ஆக்ரா பயிற்சி முகாமில் இந்திய ராணுவ விமானத்திலிருந்து ஐந்து பாராசூட் பயிற்சி முடித்த பின்னர் தோனி ஒரு தகுதி வாய்ந்த பார்ட்ரூப்பராகத் தேர்வு பெற்றார். அப்போது அவர், சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில்இருந்து பாராசூட்டில் குதித்து பயிற்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.