

போபால்
மத்திய பிரதேசம், உத்தர பிர தேசம், டெல்லி உள்ளிட்ட 6 மாநி லங்களில் கலப்பட பால் விற்பனை நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10,000 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் மோரினா மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு கலப்பட பால் விற்பனை செய்யப்படுவதாக அந்த மாநில போலீஸாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் நேற்று முன் தினம் சுமார் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில் சுமார் 10,000 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப் பட்டது. இந்த பாலில் ஷாம்பு, சோப்பு பவுடர், சோடியம் தை யோசல்பேட் உள்ளிட்ட ரசாயனங் கள் கலக்கப்பட்டிருப்பது ஆய்வக சோதனையில் தெரியவந்தது.
மத்திய பிரதேசத்திலிருந்து டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ் தான், ஹரியாணா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கலப் பட பால் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய பிரதேச போலீஸார் கூறியதாவது:
சுமார் 30 சதவீதம் பால் மற்றும் 70 சதவீதம் மலிவான ரசாயனங்களை பயன்படுத்தி கலப்பட பால் தயா ரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு லிட்டர் கலப்பட பாலுக்கான உற்பத்திச் செலவு ரூ.5 ஆகும். இந்த பாலை 6 மாநிலங்களைச் சேர்ந்த பெரு நகரங்களில் ரூ.40 முதல் ரூ.50 விலையில் விற்பனை செய்துள்ள னர். சந்தையில் பிரபலமாக இருக் கும் நிறுவனங்களின் பெயர்களில் கலப்பட பால் விற்பனை செய்யப் பட்டுள்ளது. இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.
நாடு முழுவதும் கலப்பட பால் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தேசிய அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்பட பாலை உற்பத்தி செய்வோர், விற்பனை செய்வோருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். குழந்தை கள் நலன் சார்ந்த விவகாரம் என் பதால் மத்திய, மாநில அரசுகள் மிகுந்த அக்கறையுடன் செயல் பட வேண்டும் என்று சமூக ஆர் வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.