Published : 22 Jul 2019 08:15 AM
Last Updated : 22 Jul 2019 08:15 AM

வரதராஜ பெருமாள் கோயிலுக்கு காரில் செல்ல தடை போலீஸாரிடம் அரசியல் கட்சியினர் வாக்குவாதம்

ரங்கசாமி குளம் அருகே மாற்றுப்பாதையில் செல்லாமல் பெண் காவலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி பிரமுகர். படம்: கோ.கார்த்திக்.

காஞ்சிபுரம்

அத்திவரதர் விழாவில் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களிடம், சுவாமி தரிசனத் துக்கு வரும் அரசியல் பிரமுகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவ தால், பெண் காவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்ற னர்.

வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 21 நாட்களாக அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. அத்திவரதரை உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்து வரு கின்றனர். பக்தர்களின் வசதிக்காக நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பக்தர்களின் கார் கள் உள்ளிட்ட வாகனங்களை ரங்க சாமி குளம் அருகிலேயே போலீ ஸார் தடுத்து நிறுத்தி வருகின்ற னர். ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மட்டுமே செட்டித் தெரு வரை அனுமதிக்கப்படு கின்றன.

மன உளைச்சலுடன்

இந்நிலையில், அத்திவரதரை தரிசிக்க வரும் அரசியல் பிரமுகர் கள் சிலர் குடும்பத்துடன் கார் களில் வருகின்றனர். இவர்கள், மேற்கு ராஜகோபுரம் வரையில் காரிலேயே செல்ல வேண்டும் என்பதற்காக, போலீஸாரின் கட் டுப்பாடுகளை மீறுகின்றனர். ரங்க சாமி குளம் அருகே இவ்வாறான வாகனங்களை தடுத்து, போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் வசைபாடும் நிலை உள்ளது. இதனால், பெண் காவலர்கள் மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து, பெண் காவலர் கள் சிலர் கூறும்போது, "பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும் நிலையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் அத்துமீறி செயல்படுகின்றனர். எம்பி, எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களின் உறவினர் கள் எனக்கூறி மிரட்டுகின்றனர். வாகனங்களை தடுத்தால், தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

சக ஆண் போலீஸாரும், இதனால் பிரச்சினை ஏற்படும் எனக்கருதி வாக்குவாதத்தை தடுத்து சமாதானம் செய்வதற்கும் தயங்கும் நிலை உள்ளது. உயர் அதிகாரிகளிடம் முறையிட முடியாமல் மன உளைச்சலுடன் பணியாற்றுகின்றோம்.

அதனால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதுபோன்ற விழாக் காலங்களில் போலீஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தங்கள் கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்த வேண்டும்" என்ற னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x