

புதுடெல்லி
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத, காங்கிரஸ் கூட் டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த இரு வாரங்களில் 12 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜி னாமா செய்தனர். பெரும்பான்மையை இழந்த குமாரசாமி பதவி விலக வேண்டும் என பாஜக போராட்டத்தில் குதித்தது.
எனவே குமாரசாமி கடந்த 12-ம் தேதி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தயா ராக இருப்பதாக அறிவித்தார். இதனி டையே அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம், '' அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கும்படி பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது. காங்கிரஸ்,மஜத கொறடா நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு அதி ருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத் தக்கூடாது'' என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
கடந்த வியாழக் கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் உட்பட காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த மேலும் 3 பேர் அவைக்கு வரவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 முறை ஆளுநர் கெடு விதித்தபோதும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. அதேசமயம் அவை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று கர்நாடக சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மறுப்பதாகவும், எனவே அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது நாளை மாலை 5 மணிக்குள் அவையில் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.