பில்லி சூனியத்தில் ஈடுபட்டதாக நான்கு பேர் அடித்துக்கொலை: ஜார்க்கண்டில் பயங்கரம்

சித்தரிப்புப் படம்
சித்தரிப்புப் படம்
Updated on
1 min read

ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பில்லி சூன்யம், மந்திர தந்திரங்களில் ஈடுபட்டதாகக் கூறி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து கும்லா காவல் கண்காணிப்பாளர் அனன்ஜனி குமார் ஜா தெரிவிக்கையில், 

சிஸ்காரி கிராமத்தில் இன்று அதிகாலை இச்சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வீட்டுக்குள் இருந்த 60 வயது மிக்க சாப்பா ஓராயோன், அவரது மனைவி மற்றும் இரண்டு பேர் ஆகிய நான்குபேரை வெளியே இழுத்து வந்தனர். அவர்களின் தொண்டையை அறுத்துக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் வீட்டுக்குள் சூன்ய மந்திர தந்திரங்களில் ஈடுபட்டதாக தாக்குதல் நடத்தியவர்கள் நம்பியுள்ளனர். அதன் அடிப்படையில் அவர்களை வெளியே இழத்துவந்து கொன்றுள்ளனர். 

இக்குடும்பத்தினரால் இக்கிராமத்தில் சில மோசமான நிகழ்வுகள் நடந்துள்ளதாக கிராமவாசிகள் குற்றம்சாட்டினர். உள்ளூர் பஞ்சாயத்து பில்லி, சூன்ய மந்திர தந்திரங்களில் ஈடுபட்டுவரும் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக அதிகாலை 3 மணியளவில் கூட்டப்பட்டதாக தெரிகிறது. அதன்பின் இச்சம்பவம்
நடந்துள்ளது. 

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்த உடல்களை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. ஜார்க்கண்டில் இதே காரணத்திற்காகத்தான் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஆயிரம் பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in