மற்ற மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: டி.ராஜா

மற்ற மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: டி.ராஜா
Updated on
1 min read

புதுடெல்லி

தமிழகத்தை போல மற்ற மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள டி.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய தேசிய பொதுச் செயலாளரான சுதாகர் ரெட்டி, தனது உடல் நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பொறுப்பிலிருந்து விலக முடிவெடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அக்கட்சி யின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தற்போதைய தேசிய செயலாள ரான டி.ராஜா, கட்சியின் புதிய தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற தேசியக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு, டி.ராஜாவின் தேர்வு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் டி.ராஜா கூறியதாவது:

நாடு தற்போது அபாயகரான சூழலில் உள்ளது. பாஜகவின் வலதுசாரி அரசியல் தேசத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பாஜகவை தமிழகம் வெற்றிகரமாக எதிர்கொண்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைந்த கூட்டணி, பாஜக அணியை வீழ்த்தியது. நாடுமுழுவதம் மற்ற மாநிலங்களிலும் இதேபோன்று பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இதற்கான முன்னெடுப்பை இந்திய கம்யூனிஸ்ட் மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ராஜா, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத் தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக பதவி வகித்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in