ஷீலா தீட்சித் இறுதிச் சடங்கு: தலைவர்கள் அஞ்சலி

ஷீலா தீட்சித் இறுதிச் சடங்கு: தலைவர்கள் அஞ்சலி
Updated on
2 min read

புதுடெல்லி

மறைந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முதல்வ ராக நீண்ட காலம் பதவி வகித்தவருமான ஷீலா தீட்சித் நேற்று காலமானார். அவருக்கு வயது 81.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக் கப்பட்டிருந்த ஷீலா தீட்சித் துக்கு நேற்று காலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

கடந்த 1984-ல் உத்தர பிரதேச மாநிலம் கனோஜ் மக்களவைத் தொகுதியில் இருந்து ஷீலா தீட்சித் முதல் முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய சகாவான இவர், ராஜீவ் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றார்.

டெல்லி முதல்வராக 1998 முதல் 2013 வரை 3 முறை ஷீலா தீட்சித் பதவி வகித்துள்ளார். டெல்லி முதல்வராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். டெல்லியில் சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள் என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

ஷீலா தீட்சித் தற்போது டெல்லி காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார்கடந்த மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரியிடம் தோல்வி அடைந் தார்.

ஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் துணை பிரதமர் அத்வானி, பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டத. இதைத்தொடர்ந்து டெல்லி நிகாம்போத் காட் பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in