

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வரு வதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 7,500 கன அடி நீர் திறக்கப் பட்டுள்ளது. இந்த நீர் பிலிகுண்டுலு வழியாக நேற்று தமிழகத்தை அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் மே மாத இறுதி யில் பெய்ய வேண்டிய தென் மேற்குப் பருவமழை தாமதமான தால் காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு கடந்த மே, ஜூன் மாத காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களில், காவிரியில் நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடு மாறு முறையிட்டது. இதையடுத்து ஆணைய தலைவர் மசூத் உசேன் கர்நாடகாவில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய காவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாக மண்டலா, சோமவார்பேட்டை, மடி கேரி உள்ளிட்ட பகுதிகளில் பருவ மழை பெய்தது. கடந்த சில திwனங் களாக குடகு மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் மண்டியா வில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் ஜூலை 1-ம் தேதி 80.05 அடியாக இருந்த கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 91.25 அடியாக உயர்ந் துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,100 கன அடி நீர் வந்து கொண்டிருப் பதால், அணையில் இருந்து வினாடிக்கு 5,174 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக சுமார் 500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென 5,174 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில தினங் களாக கனமழை பெய்து வருவ தால் கபிலா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 1,550 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து 2,550 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,270.25 அடியாக உயர்ந்துள்ளது.
கன்னட அமைப்பினர் எதிர்ப்பு
கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ கத்துக்கு வினாடிக்கு 7,724 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர கிராம மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்ல மண்டியா, ராம்நகர் மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. காவிரி நீர் மேகேதாட்டுவை கடந்து நேற்று இரு மாநில எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவை கடந்த தால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதற்கு மண் டியா மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கம், கன்னட ரக்ஷனா அமைப் பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப் பட்டினாவில் விவசாய அமைப்பின ரும், கன்னட அமைப்பினரும் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. இதையடுத்து போராட்டக்காரர் களை கைது செய்த போலீஸார் மாலையில் விடுவித்தனர்.