Published : 20 Jul 2019 06:45 PM
Last Updated : 20 Jul 2019 06:45 PM

கனமழை எதிரொலி: நிலச்சரிவினால் பெங்களூரு - மங்களூரு இடையே ரயில்கள் ரத்து 

கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு-மங்களூரு இடையே பகல் நேர ரயில்கள் ஞாயிறு, திங்கடிகிழைமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது, இரவு நேர ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பெங்களூரு-மங்களூரு இடையே ஹசன் - மங்களூரு ரயில் பாதையில் மலைப்பகுதியான சகலேஷ்பூர் - சுப்ரமணிய சாலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில்  கனமழை எதிரொலியால் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பாதையில் செல்லும் இரவு நேர ரயில்கள் சேலம், பாலக்காடு வழியே திருப்பி விடப்பட்டுள்ளது. 

ரயில் எண் 16575 யஸ்வந்த்பூர்-மங்களூரு சந்திப்பு கோமதேஷ்வரா எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிறன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.  மங்களூரு- யஸ்வந்த்பூர் கோமதேஷ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் திங்களன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சகலேஷ்பூர் - சுப்ரமணிய சாலை மலைப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் பாறைகளில் மண் தளர்ந்து மண்சரிவு, நிலச்சரிவு ஏற்படுகிறது. ரயில் பாதையில் ஒரு பெரிய பாறை உருண்டு வந்து விழுந்தது, அதை வெடி வைத்து தகர்த்த பிறகே அப்பகுதியில் பாதுகாப்பாக ரயில்களை இயக்க முடியும். ரயிவே மீட்புப் படையினர் ரயில் இருப்புப் பாதையருகே சிதறிக்கிடக்கும் நிலச்சரிவு சேறு சகதி, பாறைகளை அகற்றும் பணியில் இரவுபகலாக பணியாற்றி வருகின்றனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x