

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முதல்வ ராக நீண்ட காலம் பதவி வகித்தவருமான ஷீலா தீட்சித் நேற்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 81.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக் கப்பட்டிருந்த ஷீலா தீட்சித் துக்கு நேற்று காலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயி ருக்கு ஆபத்தான நிலை யில் டெல்லியில் உள்ள போர்டிஸ் எஸ்கார்ட் இதய மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். மருத்து வக் குழுவின் தீவிர சிகிச் சைக்கு பிறகு அவரது உடல் நிலையில் தற்காலிக முன் னேற்றம் ஏற்பட்டது. எனினும் அவருக்கு மீண்டும் மார டைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி பிற்பகல் 3.55 மணிக்கு காலமானார்.
கடந்த 1984-ல் உத்தர பிரதேச மாநிலம் கனோஜ் மக்களவைத் தொகுதியில் இருந்து ஷீலா தீட்சித் முதல் முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய சகாவான இவர், ராஜீவ் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற் றார்.
டெல்லி முதல்வராக 1998 முதல் 2013 வரை 3 முறை ஷீலா தீட்சித் பதவி வகித்துள்ளார். டெல்லி முதல்வராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். டெல்லியில் சாலைகள், பாலங் கள், போக்குவரத்து வசதிகள் என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி, சுகா தார வசதிகளை மேம்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
2014-ல் இவர் கேரள ஆளு நராக பதவியேற்றார். என்றா லும் 6 மாதங்களில் பதவி விலகினார்.
ஷீலா தீட்சித் தற்போது டெல்லி காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார். இப்பதவியில் இருந்து அஜய் மக்கான், உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்ததால், அப்பதவிக்கு கடந்த ஜனவரி 10-ம் தேதி ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டார்.
கடந்த மக்களவைத் தேர்த லில் வடகிழக்கு டெல்லி தொகு தியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரியிடம் தோல்வி அடைந் தார்.
ஷீலா தீட்சித் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “டெல்லி முதல்வராக ஷீலா தீட்சித் பதவி வகித்த காலத்தில் தலை நகர் மிகப்பெரிய மாற்றத்தை கண்டது. அதற்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார்” என்று கூறியுள்ளார்.
ஷீலா தீட்சித் மிகச் சிறந்த நிர்வாகி என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “ஷீலா தீட்சித் மறைவு பற்றி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். மிகுந்த அன்பும் இனிய பண்பு களும் கொண்ட தலைவர். டெல்லியில் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஷீலா தீட்சித் மறைவு பற்றி அறிந்து கடும் அதிர்ச்சி அடைந் ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். “காங்கிரஸ் கட்சியின் அன்புக் குரிய மகளான அவரிடம் நான் தனிப்பட்ட முறையில் நெருங் கிய நட்பு கொண்டிருந்தேன். மூன்று முறை டெல்லி முதல்வராக சுயநலமின்றி பணியாற்றியுள்ளார். இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் டெல்லி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன்” என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டரில், “காலம் முழுவதும் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த ஷீலா தீட்சித் 3 முறை டெல்லி முதல்வராக இருந்தபோது அதன் முகத்தை மாற்றியவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளது.
அர்ப்பணிப்புடன் பணியாற் றும் மக்களின் தலைவரை நாடு இழந்து விட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச் சர் ப.சிதம்பரம் விடுத்துள்ள செய்தியில், “டெல்லி மக் கள் அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர். டெல்லி மக்கள் ஒவ்வொருவரும் தங் கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வரை இழந்துவிட்டதாக உணர் வார்கள்” என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது இரங்கல் செய்தியில், “டெல்லிக்கு இது மிகப்பெரிய இழப்பு. அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
2 நாள் துக்கம் அனுசரிப்பு
ஷீலா தீட்சித்தின் உடல் டெல்லி, கிழக்கு நிஜாமுதீன் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப் பட்டு, பொது மக்களின் அஞ்ச லிக்கு வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் ஷீலா தீட்சித் உடலுக்கு அஞ்சலி செலுத்தி னர். டெல்லி நிகாம்போத் காட் பகுதியில் இன்று இறுதிச் சடங்கு நடைபெறும் என டெல்லி காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
மறைந்த ஷீலா தீட்சித்துக்கு மரியாதை செலுத்தும் வித மாக டெல்லி அரசு 2 நாள் துக்கம் அறிவித்துள்ளது. அரசு மரியாதையுடன் அவரது இறு திச்சடங்குகள் நடைபெறும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.