

இரா.வினோத்
பெங்களூரு
சிறையிலிருந்து சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதி யான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு கள் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூரு வில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ளார்.
அவரை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், எம்எல்ஏவு மான டிடிவி தினகரன், கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் நேற்று சந்தித்து பேசினர்.
சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம், அமமுக கட்சி விவகாரம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
பின்னர் வெளியே வந்த டிடிவி தினகரன், அங்கிருந்த செய்தியாளர் களிடம் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சசிகலா சிறையில் உள் ளார். அவரை வெளியே கொண்டு வருவது தொடர்பான சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
நன்னடத்தை விதிமுறையின் கீழ் அவர் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அவர் விரைவில் விடுதலையாவார் என நம்புகிறோம். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என தினகரன் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நன்னடத்தை விதிமுறை களின் அடிப்படையில் சசிகலாவை விடுவிக்க வேண்டும் என சிறைத் துறை அதிகாரிகள் கர்நாடக உள் துறைக்கு பரிந்துரை செய்ததாக செய்திகள் வெளியானது குறிப் பிடத்தக்கது.