

என்.மகேஷ்குமார்
ஹைதராபாத்
நகராட்சி சட்டத் திருத்தம் 2019-ன் படி, 75 கஜத்திற்குள் வீடு கட்டுபவர்கள் ரூ. 1-க்கு பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானாவில் நகராட்சி, மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா தொடர்பாக 2 நாள் சிறப்பு சட்டப் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் இறுதி நாளான நேற்று முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பேசும்போது, “லஞ்சம் இல்லாத, ஊழல் இல்லாத ஆட்சியை வழங் கவே நகராட்சி, மாநகராட்சி சட்டத் தில் திருத்தம் கொண்டுவரப் படுகிறது. மகாத்மா காந்தியின் கனவான கிராம வளர்ச்சியை நனவாக்குவோம்.
வருங்கால சந்ததியினர் நலமுடன் வாழ நாம் வழிவகுக்க வேண்டும். குறிப்பாக ஏழைகள் இல்லா சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். நகராட்சி சட்டத் திருத்தம் 2019-ன்படி 75 கஜத்திற்குள் வீடு கட்டுபவர்கள், ரூ. 1-க்கு பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம். அந்த வீட்டுக்கு மேல் மற்றொரு வீடு கட்டவேண்டி இருந்தால் மட்டுமே உரிய கட்டணத்தை செலுத்தி பத்திரப் பதிவு செய்ய வேண்டும்.
இந்த சட்டத் திருத்தத்தின்படி, சட்டத்துக்கு பறம்பான கட்டிடங் கள் எவ்வித நோட்டீஸும் வழங்கப் படாமல் இடித்து தள்ளப்படும். ஆதலால் யாராவது சட்டத்துக்கு பறம்பாக வீடு, வணிக வளாகங் கள், கடைகள், அலுவலகங்கள் கட்டியிருந்தால் அவற்றை அவர் களே இடித்து விடலாம்” என்றார்.