Published : 20 Jul 2019 07:31 AM
Last Updated : 20 Jul 2019 07:31 AM

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை; ஆளுநர் கெடுவை ஏற்க குமாரசாமி மறுப்பு: 22-க்கு அவை ஒத்திவைப்பு; உச்ச நீதிமன்றத்தில் காங்., மஜத முறையீடு

இரா.வினோத்

பெங்களூரு

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் விதித்த 2 கெடுவையும் முதல்வர் குமாரசாமி ஏற்க மறுத்ததால், கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் நேற்றிரவு அவசர அறிக்கை அனுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத, காங்கிரஸ் கூட் டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த இரு வாரங்களில் 12 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜி னாமா செய்தனர். பெரும்பான்மையை இழந்த குமாரசாமி பதவி விலக வேண்டும் என பாஜக போராட்டத்தில் குதித்தது. எனவே குமாரசாமி கடந்த 12-ம் தேதி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தயா ராக இருப்பதாக அறிவித்தார். இதனி டையே அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம், '' அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கும்படி பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது. காங்கிரஸ்,மஜத கொறடா நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு அதி ருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத் தக்கூடாது'' என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், கடந்த வியாழக் கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத் தப்படும் என அறிவிக்கப்பட்டது. மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் உட்பட காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த மேலும் 3 பேர் அவைக்கு வரவில்லை. பேரவையில் உருக்கமாக உரையாற்றிய குமார சாமி நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார்.

உள்ளிருப்பு போராட்டம்

அப்போது பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் சித்த ராமையா, ‘‘அதிருப்தி எம்எல்ஏக் களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் எனக்கு (கொறடா) உத்தரவிட்டு இருப்பதன் மூலம், அரசியலமைப்பின் 10-வது அட்டவணை கொறடாவுக்கு அளித்துள்ள அதிகாரத்தை இந்த தீர்ப்பு பறிப்பதாக உள்ளது. கொறடாவின் அதிகாரம் குறித்த தெளிவான முடிவு எடுத்த பிறகே நம்பிக்கை வாக் கெடுப்பு நடத்த வேண்டும்'' என கோரியதால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் நம் பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் பாஜகவினர் அவையை விட்டு வெளியேறாமல் இரவு விடிய விடிய உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். எடியூரப்பா, ஜெக தீஷ் ஷெட்டர் உள்ளிட்ட தலைவர்கள் அவையின் மையப்பகுதியிலே தூங்கி னர். இந்நிலையில் ஆளுநர் வாஜூபாய் வாலா, வெள்ளிக்கிழமை 1.30 மணிக் குள் நம்பிக்கை வாக்கை நடத்த வேண் டும் என குமாரசாமிக்கு உத்தரவிட்டார்.

குமாரசாமி சூசக பேச்சு

நேற்று அவை தொடங்கியதும் குமாரசாமி, ''எனது ஆட்சியை பல் வேறு சூழ்ச்சிகளின் காரணமாக முடி வுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இனிமேலும் அதிருப்தி எம்எல்ஏக்களை திரும்பி வாருங்கள் என அழைக்க மாட்டேன். நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது.

பாஜக திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை ஆட்சி அமைக்க உரிமை கோர லாம். ஆனால் அதற்கு முன்பாக அவை யில் காங்கிரஸ், மஜத முன் வைக்கும் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண் டும். அந்த விவாதத்துக்கு பிறகே நம் பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எங்களுக்கு பிரச்சினை ஏற்பட்ட போதெல்லாம் ஆளுநர் அமைதி யாக இருந்தார். இப்போது எங்களுக்கு மட்டும் கெடு விதிப்பது நியாயமா'' என்றார். குமாரசாமியின் இந்த சூசக பேச்சினால், அவர் ராஜினாமா செய்யப் போகிறாரா என கேள்வி எழுந்தது.

அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, ‘‘இனிமேலும் குமாரசாமி காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது. ஏற்கெனவே அறிவித்தவாறு நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக‌ நடத்த வேண்டும். கொறடாவின் அதிகாரம் குறித்து விவாதம் நடத்தி, அவையின் நேரத்தை வீணடிப்பதை அனுமதிக்க முடியாது. ஆளுநர் வாஜூபாய் வாலா பேரவைத் தலைவரை கேட்டுக் கொண்டவாறு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' எனக் கோரினார்.

ஆளுநர் விதித்த கெடுவின்படி பிற்பகல் 1.30 மணி முடிந்தும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதனால் முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், ‘‘மாலை 6 மணிக்குள் நம்பிக்கை நடத்த வேண் டும்''என உத்தரவிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, ''நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முதல்வ ருக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநரின் இந்த கடிதம் சட்டப்பேரவையின் அதி காரத்தை பறித்து, மாநில அரசை முடக்கும் விதமாக உள்ளது. இதனை முதல்வர் ஏற்க கூடாது''என்றார்.

பிற்பகல் 3 மணிக்கு அவை தொடங் கிய போது பேசிய முதல்வர் குமாரசாமி, ‘நான் நம்பிக்கை வாக்கெடுப்பை நேற்று தொடங்கி விட்டேன். அதன் மீதான விவாதங்கள் முடிவடையாத நிலையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவது குறித்து பேரவைத் தலைவரே முடிவெடுக்க வேண்டும். ஆளுநர் உத்தரவை பின் பாற்றாததால் ஏற்படும் விளைவில் இருந்து பேரவைத் தலைவர் தான் என்னை காப்பற்ற வேண்டும். கடந்த ஒரு வாரமாகவே குதிரை பேரம் குறித்து பேசி வருகிறேன். ஆளுநர் இதுவரை எந்தக் கருத்தும் கூற வில்லை. எங்கள் எம்எல்ஏக்கள் ஏன் மும்பையில் தங்க வைக்கப்பட்டிருக் கிறார்கள், அவர்களை அழைத்து சென்றது யார் என ஆளுநர் கேள்வி எழுப்ப வேண்டும்'' என்றார்.

அதற்கு சித்தராமையா, ‘‘சட்டப் பேரவையில் மஜத எம்எல்ஏக்கள் பலர் தங்களிடம் நடத்தப்பட்ட குதிரை பேரம் குறித்து பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்கள். அதைப் பற்றியெல் லாம் விவாதிக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது''என்றார். இதனை மற்ற காங்கிரஸ், மஜதவினரும் வலியுறுத்தியதால் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட் டது. இதன் காரணமாக ஆளுநர் விதித்த 2-வது கெடுவும் முடிவடைந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் இழுபறி தொடர்ந்தது.

22-ம் தேதி முடித்து கொள்கிறோம்

மாலை 7 மணிக்கு எடியூரப்பா பேசும்போது, ‘‘குமாரசாமியின் அர சியல் நாடகத்துக்கு பேரவைத் தலைவரும் உடந்தையாக இருக் கிறாரா என சந்தேகப்படும் அளவுக்கு அவை நடவடிக்கைகள் உள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வரை பாஜகவின் உள்ளிருப்பு போராட்டம் தொடரும்''என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங் கிரஸ், மஜதவினர் அவையின் மையப் பகுதிக்கு வந்து அவையை ஒத்தி வைக்குமாறு முழக்கம் எழுப்பினர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரி வித்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப் போது காங்கிரஸ் தலைவர் சித்தரா மையா, ''எங்களுடைய விவாதத்தை எல்லாம் திங்கள்கிழமையுடன் முடித் துக்கொள்கிறோம். எனவே அவை ஒத்தி வைக்க வேண்டும்''என கோரினார். இதையடுத்து பேரவைத் தலைவர் அவையை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் அவையை விட்டு வெளி யேறாமல் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனிடையே முதல்வர் குமாரசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார். அவர் தனது மனுவில், "கர்நாடக சட்டப்பேரவையில் நம் பிக்கை வாக்கெடுப்பு நடவடிக்கை தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் வாக்கெடுப்பை உடனடியாக நடத்து மாறு ஆளுநர் உத்தரவிடுவதற்கு அதி காரம் கிடையாது. ஆளுநரின் நட வடிக்கை சட்ட விரோதமானது" என்று தெரிவித்தார். இதேபோல் கர்நாடக காங் கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் "அதிருப்தி எம்எல்ஏக் களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு உத்தரவிட கொறடாவுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப் பில் தெளிவாக விவரங்கள் குறிப்பிட வில்லை. விரிவான விளக்கம் வேண்டும்'' எனக் கோரியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x