அனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லிம் பெண்ணுக்கு மிரட்டல்

அனுமன் பஜனையில் பங்கேற்ற முஸ்லிம் பெண்ணுக்கு மிரட்டல்
Updated on
1 min read

கொல்கத்தா

மேற்குவங்க தலைநகர் கொல் கத்தாவை சேர்ந்தவர் இஷ்ரத் ஜகான். துபாயில் பணியாற்றிய இவரது கணவர் கடந்த 2014-ம் ஆண்டில் தொலைபேசியில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார். முத்தலாக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த 5 மனுதாரர்களில் இவரும் ஒருவர். கடந்த 2017 டிசம்பரில் இவர் பாஜகவில் இணைந்தார்.

கொல்கத்தாவில் பாஜக இளைஞர் அணி அண்மையில் நடத்திய அனுமன் பஜனையில் இஷ்ரத் ஜகான், ஹிஜாப் அணிந்து பங்கேற்றார். இதற்காக அவரது உறவினர்கள் அவரை கடுமையாக மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து இஷ்ரத் ஜகான் கூறியபோது, "கடந்த புதன்கிழமை எனது உறவினர்கள், வீட்டின் உரிமையாளர் உட்பட சுமார் 100-க் கும் மேற்பட்டோர் என்னை சூழ்ந்து மிரட்டினர். நான் வசித்த வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டனர். இதுதொடர்பாக கொல் கத்தாவின் கோலாபாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள் ளேன். எனது உயிருக்கு அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ளது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in