

அசாம் மாநிலத்தில் கடும் மழை காரணமாக பெருக்கெடுத்தோடிய வெள்ளம் காஸிரங்கா தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் பாய்ந்ததால் புலி, காண்டாமிருகம்உள்ளிட்ட விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடின. இதில் நிறைய விலங்குகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அசாமில் வெள்ளம் சூழ்ந்த காசிரங்காவிலிருந்து யானைகள், மான்கள், பன்றிகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் தப்பிச்செல்லும்காட்சிகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
உலகப் புராதனச் சின்னமான பாகோரி வனச்சரகப் பகுதி அருகே ஹார்மோடி என்ற ஊரில் உள்ள ஒரு கடைக்குள் ராயல் வங்காளப் புலி ஒன்றுநுழைந்தது. கடைக்குள் நுழைந்த புலி அங்கிருந்த ஒரு படுக்கையில் ஓய்வெடுக்கும் காட்சி வைரலாகியது. இக்காட்சி சமூக ஊடகங்களில் ஒரு சலசலப்பைஉருவாக்கியுள்ளது. வனவிலங்குகளை காக்க முடியாமல் அசாம் தத்தளிப்பதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி ஒயில்டு லைப் ட்ரஸ்ட் ஆப் இண்டியா இப்படத்தை வெளியிட்டு வெள்ளம் வழக்கமில்லாத விருந்தாளிகளைக் கொண்டுவந்து சேர்த்துள்ளதுஎன்று தெரிவித்துள்ளது.
இன்று காலை 7 மணி அளவில் ரபிக்குள் இஸ்லாம் என்பவரின் கடைக்குள் நுழைந்தததாகவும் கடைக்குள்ளிருந்த அவரது படுக்கையில் போய்படுத்துக்கொண்டதை கவனித்ததாகவும் உள்ளூர் மக்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கே.என்.பி பாகோரி தெரிவிக்கையில், எவ்வாறாயினும், புலி தொந்தரவு செய்யப்படவில்லை, அதன் இயக்கம்மட்டுமே தற்போது கண்காணிக்கப்படுகிறது. புலி தானாகவே வெளியேறுவதற்காகத்தான் வன அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். அவ்வாறு வெளியேறவில்லையென்றால், அதன்பிறகுதான் அதனை காட்டுக்குள் கொண்டு போய்விடும் முயற்சிகள் இருக்கும் என்றார்.
காசிரங்கா வனவிலங்கு தேசிய சரலாணயத்தின் 95 சதவீதப் பகுதி நீரில் மூழ்கிவிட்டது. இதனால் அங்கு வசித்து வந்த விலங்குகள் தங்களுக்கென்று இருந்தபாதுகாப்பான தங்குமிடத்தையும் இழந்துள்ளன. அதனால் மனித வாழ்விடங்களில் எல்லாம் சென்று அடைக்கலம் தேடி வருகின்றன.
இருக்கும் விலங்குகளிலேயே புலிதான் தன்னை மிகவும் பாதுகாப்பாக காத்துக்கொள்ளும் விலங்கு என்று அறியப்படுகிறது. ஆனால் அது வாழ்ந்து வந்தகுகையில் வெள்ளம் சூழ்ந்ததால் வேறு வழியின்றி தற்போது வெளியேற்றப்பட்ட சூழ்நிலையில் தனக்கென்று ஒரு ஓய்விடத்தைத் தேடி அது அலைவது மிகவும்பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.
அசாமின் 33 மாவட்டங்களில் 29களில் கடும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் புகழ்பெற்ற ஒரு கொம்பு காண்டாமிருகம் பலவும் ஏராளமான பிற விலங்குகள்பெருமளவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மனாஸ் தேசிய பூங்கா மற்றும் போபிடோராவின் வனவிலங்கு சரணாலயத்தின் பெரிய அளவிலான பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டன. இங்கிருந்த காண்டாமிருகங்கள், யானைகள், மான் மற்றும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அருகிலுள்ள செயற்கையான மேட்டுப்பகுதிகள் மற்றும் கர்பிஆங்லாங் மலைப்பகுதிகளுக்கு சென்று விட்டன.