

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்து வதற்கு முன்பாகவே முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசியலில் குழப்ப மான சூழல் உருவானதை தொடர்ந்து, பாஜக எம்எல்ஏக்கள் பெங்களூருவில் உள்ள ரமடான் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெற உள்ள நிலை யில், எடியூரப்பா நேற்று பாஜக தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக் களுடன் ஆலோசனை நடத்தி னார். அப்போது நம்பிக்கை வாக் கெடுப்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எம்எல்ஏக் களுக்கு அவர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கர்நாடக அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா தொடர் பான வழக்கில், உச்ச நீதிமன் றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற் கிறேன். இது, அரசமைப்புச் சட்டத் துக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். அதிருப்தி எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என கொறடா மூலம் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடி யாது என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இது அவர்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
16 எம்எல்ஏக்கள் ராஜினாமா முடிவை அறிவித்தபோதே குமாரசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டார். தார்மீக ரீதியாக அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண் டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, அதிருப்தி எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம் என அறிவித் துள்ளனர். இதனால் குமாரசாமி தோல்வி அடைவது உறுதியாகி விட்டது.
என்னைப் பொறுத்தவரை, வியாழக்கிழமை (இன்று) அவை தொடங்கியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து குமாரசாமி உரையாற்றுவார். அதன் பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என நினைக்கிறேன்.
இதைத் தவிர அவருக்கு வேறு வழி இல்லை. பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் மீது நம்பிக்கை உள்ளது. அவர் அரசமைப்புச் சட்டத்தின்படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் செயல் படுவார் என நம்புகிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பில் குமார சாமி தோல்வி அடைந்த பிறகு, பாஜக ஆட்சி அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.