Published : 18 Jul 2019 08:34 AM
Last Updated : 18 Jul 2019 08:34 AM

அறிஞர் ஜி.டி. நாயுடுவின் அறிவுரையை ஏற்று பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ரூ.1 கோடி வழங்கிய முன்னாள் ராணுவ வீரர்

புதுடெல்லி

பணி ஓய்வு பெற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன் னாள் விமானப் படை வீரர் ஒருவர் பாதுகாப்புத் துறை அமைச்சகத் துக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் நிதி வழங்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் சி.பி.ஆர். பிரசாத். இந்திய விமானப் படையில் கடந்த 1960-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், அங்கு 9 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர், ரயில்வே தேர்வு எழுதிய பிரசாத், அதில் தேர்ச்சி பெற்றார்.

ரயில்வேயில் தனக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதால், விமானப் படை பணியில் இருந்து அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.ஆனால், துரதிருஷ்டவசமாக, அவருக்கு அந்த வேலை கிடைக்கா மல் போனது. இதனால் மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்க் கையை நடத்து மிகவும் சிரமப்பட்டார். எனினும், பிரசாத் நம்பிக்கையை கைவிட வில்லை. துணிச்சலாக கடன் பெற்று கோழிப் பண்ணை ஒன்றை தொடங் கினார். ஆரம்பத்தில் மிகவும் மந்தமாக இருந்த அவரது தொழில், விரைவில் சூடுபிடிக்க தொடங்கியது. பல இடங்களில் கோழி, வாத்து பண்ணை களை அமைத்தார். நல்ல வருமான மும் கிடைத்தது.

எனினும், அவரது மனதில் நாட்டுக்காகவும், ராணுவத்துக்காக வும் தம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மனக் குறை இருந்து வந்தது. அப்போது தான், தனது சேமிப்பின் பெரும் பகுதியை ராணுவத்துக்கு வழங்க பிரசாத் முடிவு செய்தார். இது குறித்து தனது குடும்பத்தினரிடம் அவர் தெரிவித்தார். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது குடும்பத்தினர், பின்னர் சம்மதித்தனர்.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அண்மையில் நேரில் சந்தித்த பிரசாத், ரூ.1.08 கோடியை வழங் கினார். இந்த நிதியானது, ராணுவ வீரர்களின் மேம்பாட்டுக்காக ஒதுக் கப்படும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து, பிரசாத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

நான் விமானப் படையில் பணி புரிந்தபோது, ராணுவம் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவர் தனது உரையில், "நமது குடும்பம் சார்ந்த கடமைகள் முடிந்த பிறகு, நாட்டின் நலனுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும். நமது முன்னோர்கள் அவ்வாறு செய்ததால்தான் இந்தியா இன்று மகத்தான நாடாக விளங்குகிறது" எனக் குறிப்பிட்டார்.

அந்த வார்த்தைகள் எனது மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது. எனவேதான், சுமார் 40 ஆண்டுகால எனது சேமிப்பை நமது ராணுவத்துக்கு வழங்கியிருக் கிறேன். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணர்கிறேன் என்றார்.

ரஷ்ய நாட்டில் பழமொழி ஒன்று கூறப்படுவதுண்டு. "நீங்கள் ராணுவத்தில் இருந்து ராணுவ வீரரை வெளியே எடுக்கலாம். ஆனால், அந்த ராணுவ வீரரிடம் இருக்கும் ராணுவத்தை வெளியே எடுக்க முடியாது" என்பதுதான் அது.

இது நூறு சதவீதம் உண்மை யானது என நிரூபித்திருக்கிறார் சி.பி.ஆர். பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x