Published : 17 Jul 2019 05:04 PM
Last Updated : 17 Jul 2019 05:04 PM

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: நிலுவையில் உள்ள 1.6 லட்சம் வழக்குகள் - போக்சோ சட்டம் இன்னும் வலுப்பெறுகிறது

மொத்தம் 31 மாநிங்களில் குழந்தைகளுக்கு எதிரான 1.6 லட்சம்குற்ற வழக்குகள்  தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதையடுத்து விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

மேலும், போக்சோ சட்டத்தில் தண்டனை பிரிவுகளை வலுப்படுத்தவுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் புதனன்று தெரிவித்தார்.

இதற்காக 2 முக்கியச் சட்டங்களில் திருத்தம் கோண்டு வர அமைச்சரவை ஒப்புதல் பெறுவதர்கான முன் மொழிவு செய்யப்படவுள்ளது என்றார் கிஷன் ரெட்டி.

“விரைவு நீதிமன்றங்களை நாடு முழுதும் அமைக்கவும், இதற்கான முன்மொழிவை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பவும் முடிவு எட்டப்பட்டுள்ளது.  நாங்கள் இது தொடர்பாக பல விவகாரங்களை கருத்தில் கொள்கிறோம்.  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குறங்களுக்கு எதிராக சட்டம் இன்னும் வலுப்பெறவுள்ளது. மேலும் புதுவகை குற்றங்களுக்கு எதிரான தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்” என்றார் கிஷன் ரெட்டி.

சுமார் 1.6 லட்சம் வழக்குகள் இது தொடர்பாக மட்டுமே 31 மாநிலங்களில் நிலுவையில் உள்ளன.  இந்த வழக்குகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க சட்டம் மாற்றப்படுவதோடு விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்படுவதாக தெரிவித்தார் கிஷன் ரெட்டி.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க போக்சோ சட்டத்தை மேலும் வலுப்படுத்தவுள்ளனர். 

அதாவது வலுவான சட்டங்கள் ஒரு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும், பலவீனமான குழந்தைகளை பாதுகாப்பதே அரசின் நோக்கம் என்கிறார் கிஷன் ரெட்டி.

நிர்பயா சம்பவத்துக்குப் பிறகே பாலியல் குற்றங்களை புகார் தெரிவிப்பது அதிகரித்ததற்குக் காரணம் ஆன்லைன் போர்ட்டல் உருவாக்கியது என்று உறுப்பினர் ஒருவரது கேள்விக்குப் பதில் அளிக்கையில் தெரிவித்தார் கிஷன் ரெட்டி.

மேலும் இது தொடர்பான புகார்கள் 4 மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்த ஆண்டில் மட்டும் 12,609 பாலியல் பலாத்கார வழக்குகள் போக்சோவின் கீழ் பதிவாகியுள்ளது. இதில் 6,222 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன். 2,397 வழக்குகள் 2 மாதங்களுக்கு முன்பாக புகார் அளிக்கப்பட்டதால் விசாரணையில் உள்ளன என்று அவர் மேலும் ராஜ்யசபாவில் தெரிவித்தார். 

குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் அச்சுறுத்தல் பற்றி அமைச்சர் கூறும்போது, “இது மிகவும் சீரியசான  விஷயம். இது நம் நாட்டுக்கும் உலகிற்குமே பெரிய சவால். சைபர் கிரைம் போர்ட்டல் இதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்களை கடத்துவது போன்ற குற்றங்கள் மாநில விவகாரம் என்றாலும் இதுவும் சர்வதேசப் பிரச்சினையாகும். அதற்காகத்தான் என்.ஐ.ஏ மசோதாவை அவைக்குக் கொண்டு வருகிறோம், இது தொடர்பாகவும் என்.ஐ.ஏ.வுக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்படும்” என்றார் கிஷன் ரெட்டி. (பிடிஐ)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x