மும்பை அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு

மும்பை அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு
Updated on
1 min read

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிவிழுந்து விபத்துக்குள்ளானதில் பலியோனோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

மும்பை டோங்கிரி பகுதியில் முகமது அலி சாலையில் உள்ள அப்துல் ஹமீது தர்கா அருகே கேசர் பாய் என்ற குடியிருப்பு இருந்தது. 4 மாடிகளைக் கொண்ட இந்த குடியிருப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மோப்ப நாய்கள் உதவியுடன் சிக்கியிருப்பவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான கட்டிடத்தை கடந்த 2017-ம் ஆண்டே மும்பை மாநகராட்சியால் சி1 பிரிவுக்கு உட்பட்டது எனப் பட்டியலிட்டுள்ளது. சி1 பிரிவு கட்டிடம் என்றால் அது குடியிருக்க தகுதியற்றது; விரைவில் இடிக்கப்பட வேண்டியது என்று பொருள். ஆனால், இதை மீறியும் அந்தக் கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசித்துவந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in