Published : 17 Jul 2019 12:12 PM
Last Updated : 17 Jul 2019 12:12 PM

கழிவுநீர் தொட்டி விபத்துகளைத் தடுக்க மீட்புப் படைகளை அமைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி

கழிவுநீர் தொட்டி விபத்துகளைத் தடுக்க தீயணைப்புத் துறையில் அவசர மீட்புப் படைகளை அமைக்க வேண்டும் என்று மாநில 
அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா அனைத்து மாநில செய
லாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி மனிதர்கள் சுத்தம் செய்வது சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மாநில அரசு
கள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவு தொழிலாளர்
களுக்கு முறையாக பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்க வேண்டும். 

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கழிவுநீர் தொட்டி விபத்துகளை எதிர்கொள்ள தீயணைப்புத் துறையில் சிறப்பு மீட்புப் படைகளை (இஆர்எஸ்யு) அமைக்க வேண்டும். மாநில தலைநகர் மற்றும் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் முக்கிய நகரங்களில் இந்த மீட்புப் படைகளை உருவாக்க வேண்டும். இதர பகுதிகளில் சுமார் 75 கி.மீ. சுற்றளவுக்கு ஒரு மீட்புப் படை என்ற 
வகையில் மாநிலம் முழுவதும் மீட்புப் படைகளை ஏற்படுத்த வேண்டும்.  கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் துப்புரவு தொழிலாளர்கள் கண்டிப்பாக சிறப்பு படையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகளை மீறி தன்னிச்சையாக கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடு
பட்டிருக்கும் நிறுவனங்கள், தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்பு களுக்கும் மாநில அரசுகள் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x