நெடுஞ்சாலைத் திட்டங்களை தமிழக அரசு ஆதரிக்கும்: ரவீந்திரநாத் குமார் எம்.பி. உறுதி

நெடுஞ்சாலைத் திட்டங்களை தமிழக அரசு ஆதரிக்கும்: ரவீந்திரநாத் குமார் எம்.பி. உறுதி
Updated on
1 min read

புதுடெல்லி

மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் நேற்று பேசிய தாவது:

மத்திய அரசு கடந்த 5 ஆண்டு களில் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் சாதனை புரிந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலைத் திட்டங் களை செயல்படுத்த தமிழக அரசு நிச்சயம் ஆதரவு அளிக்கும்.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை, பழனி - தாராபுரம் சாலை, ஆர்க்காடு - திண்டிவனம் சாலை, வேலூர் - திருச்செந்தூர் சாலை ஆகிய 4 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக விரிவு படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

என்னுடைய தேனி நாடாளு மன்றத் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை 49-ல் உள்ள தேனி, போடி, உசிலம்பட்டி, செக்கூரணி, ஆகிய நான்கு இடங்களிலும் ‘லெவல் கிராசிங்’ அமைத்துத் தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in