தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்: பாஜக எம்பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம்: பிடிஐ
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம்: பிடிஐ
Updated on
1 min read

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

பாஜக நாடாளுமன்ற உறுப் பினர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி எம்.பி.க்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். இதுகுறித்து நாடாளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர் களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதற்காக உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்ைைது பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தங்களுக்கு உள்ள கடமையை செய்வது மட்டுமல்லா மல், சமூக அக்கறையுடன் அல்லது மனிதாபிமான அடிப்படையில் சில பணிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக, 2025-க்குள் காச நோயை ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதால், இதை அடைய நாடாளுமன்ற உறுப்பினர் களும் பாடுபட வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார்.

இதுதவிர, மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவை நடவடிக்கையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். அவைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டால் அதுகுறித்து முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in