

சந்திர கிரகணம் இன்று அதி காலை 1.31 மணிக்கு தொடங்கி 4.29 வரை நீடித்தது. இதை யொட்டி, திருப்பதி ஏழு மலையான் கோயில், திருச்சா னூர் பத்மாவதி தாயார் கோயில் என திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயில்கள் நேற்று மாலை முதல் இன்று காலை வரை நடை அடைக்கப்பட்டது.
குறிப்பாக ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு 7 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று காலையில் கோயில் சுத்தம் செய்யப்பட்டு, 8 மணி முதல் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க லாம் என அறிவிக்கப்பட்டது.
எனினும், வாயுத்தலமான காளஹஸ்தி சிவன் கோயிலில் மூலவருக்கு நவகிரக கவசம் சாத்தப்பட்டு இருப்பதால், கிரகண காலத்தில் கோயில் நடை மூடப்படாமல், கிரகண கால அபிஷேகம் நேற்று இரவு விடிய விடிய நடைபெற்றது.