Published : 17 Jul 2019 10:13 AM
Last Updated : 17 Jul 2019 10:13 AM

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SareeTwitter: திருமணப் புகைப்படத்தை பகிர்ந்த பிரியங்கா காந்தி

ட்விட்டர் தளத்தில் #SareeTwitter என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதில் பெண்கள் பலரும் தாங்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர். 

இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த ஹேஷ்டேகின் கீழ் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

சேலை அணிந்து தானிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த பிரியங்கா, "எனது திருமண நாளன்று காலையில் நடந்த பூஜையின்போது எடுத்த படம். 22 ஆண்டுகள் கடந்துவிட்டன" எனப் பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் பிரியங்கா காந்தி சிவப்பு நிற பட்டுச்சேலையின் முந்தியை தலையில் கவிழ்த்தபடி, லேசான புன்னகையுடன் அழகாகக் காட்சியளிக்கிறார். பிரியங்காவின் அந்த புகைப்படத்துக்கு கீழ் பின்னூட்டங்கள் குவிந்து வருகின்றன. 

அரசியல் பிரமுகர் ஒருவர் சமீபத்திய வைரல் ஹேஷ்டேகில் பதிவிட்டிருப்பதால் #SareeTwitter-ன் கீழ் பல்வேறு பிரபலங்களும் தங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள், பெண் ஊடகவியலாளர்கள் சிலரும் இதில் இணைந்து கொண்டுள்ளனர்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரிகள், ஊழியர்கள் சிலர் சேலை அணிவித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x