

பெங்களூரு
கர்நாடக முதல்வர் குமாரசாமி யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. எனவே, விரைவில் பாஜக ஆட்சி அமையும் என அம் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் காங்கிரஸ், மஜத, பாஜக எம்எல்ஏக்கள் பலத்த பாதுகாப்புடன் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரு தினங்களாக, மாநில பாஜக தலைவர் எடி யூரப்பா, தனது கட்சி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரமடான் சொகுசு விடுதியில் முகாமிட்டுள்ளார். நம் பிக்கை வாக்கெடுப்பில் செயல்பட வேண்டிய விதம் குறித்து பாஜக மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா, அசோக் மற் றும் மூத்த எம்எல்ஏக்களுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் எடியூரப்பா செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் ஆளும் காங் கிரஸ், மஜதவை சேர்ந்த 16 எம்எல் ஏக்கள் தங்கள் பதவியை ராஜி னாமா செய்துள்ளனர். குமாரசாமி அரசை ஆதரித்த 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் தங்களது ஆத ரவை திரும்ப பெற்று, பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசு பெரும் பான்மையை இழந்துவிட்டது. எனவே, குமாரசாமி தார்மீக ரீதியாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி நிச் சயம் தோல்வி அடைவார். அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடி யாது. என்னைப் பொறுத்தவரை வியாழக்கிழமை அவை தொடங் கியதும், குமாரசாமி இறுதி உரையாற்றிய பின்னர், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார். எனவே, இன்னும் 3 அல்லது 4 நாட்களில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.
மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதில் காங்கிரஸார், பாஜகவை தொடர்புப்படுத்தி பேசுவதை அதிருப்தி எம்எல்ஏக் களே மறுத்துள்ளனர். காங்கிரஸார் எவ்வளவு முயற்சித்தாலும் அதி ருப்தி எம்எல்ஏக்கள் நிச்சயம் திரும்பி வர மாட்டார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
| முதல்வராக குடும்பத்தினர் ஹோமம் குமாரசாமி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எடியூரப்பா முதல்வராக வேண்டும் என அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டுள்ளனர். மண்டியா மாவட்டம் கே.ஆர். பேட்டையில் எடியூரப்பாவின் குலதெய்வ கோயிலான பூதனகிரி அம்மன் கோயிலில் அவரது சகோதரி பிரேமா நேற்று மகா கணபதி ஹோமம், துர்கா ஹோமம் செய்து சிறப்பு பூஜை செய்தார். எடியூரப்பா முதல்வராக வேண்டும் என்பதற்காகவே இந்த பூஜை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. |