செய்திப்பிரிவு

Published : 16 Jul 2019 20:57 pm

Updated : : 16 Jul 2019 20:57 pm

 

கேரளாவில் 18-ம் தேதி முதல் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

kerala

புதுடெல்லி

கேரளாவில் 18-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே சராசரிக்கும் குறைவாகவே பெய்து வருகிறது. இந்தநிலையில், கேரளாவில் வருகிற 18-ந்தேதி முதல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு 18 மற்றும் 19-ந்தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேப்போல திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

கனமழைவானிலை மையம்கேரளா

Popular Articles

You May Like

More From This Category

More From this Author