ஓட்டலில் தங்கியுள்ள பாஜக எம்எல்ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா

ஓட்டலில் தங்கியுள்ள பாஜக எம்எல்ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா
Updated on
1 min read

பெங்களூரு

கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீது 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் அணிமாறாமல் இருக்க முழு பாதுகாப்புடன் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா அவர்களுடன் கிரி்க்கெட் விளையாடினார்.

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் கூட்டணி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உட்பட 16 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து ஆளும் கூட்டணி பெரும்பான்மை இழந்து விட்டதால் குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக முதல்வர் குமாரசாமி கூறினார். சட்டப்பேரவையில் ஜூலை 18-ம் தேதி காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதையடுத்து ஆளும் கூட்டணி மட்டுமின்றி எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்களும் தனித்தனியாக சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீது 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் அணிமாறாமல் இருக்க முழு பாதுகாப்புடன் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரு ராம்தா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. ஓய்வு நேரங்களில் எம்எல்ஏக்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா இன்று மாலை ஓட்டலுக்கு வந்தார். அவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அவரும் கிரிக்கெட் விளையாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in