Published : 16 Jul 2019 04:28 PM
Last Updated : 16 Jul 2019 04:28 PM

வேலை வேண்டுமா?- மத்திய அரசுப் பள்ளிகளில் பணி;  2,365 காலி இடங்கள்

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் 'நவோதயா வித்யாலயா சமிதி' பள்ளிகளில் ஆசிரியர்கள், செவிலியர், சமையல், சட்ட உதவியாளருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

1. வேலையின் பெயர்: Trained Graduate Teachers
காலியிடங்கள்: 1,154
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்கவேண்டும்
சம்பளம்: ரூ.44,900 -  ரூ.1,42,400
கல்வித்தகுதி:  ஆங்கிலம்/இந்தி/கணிதம்/அறிவியல்/சமூக அறிவியல் பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு, பி.எட். தேர்ச்சி, CTET தேர்வில் தேர்ச்சி 

2. வேலையின் பெயர்: Post Graduate Teachers
காலியிடங்கள்: 430
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்கவேண்டும்
சம்பளம்: ரூ.47,600 -  ரூ.1,51,100
கல்வித்தகுதி: ஆங்கிலம்/ இந்தி/ கணிதம்/ இயற்பியல்/ வேதியியல்/ பொருளாதாரம்/ வரலாறு/ புவியியல்/ உயிரியல் பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டப்படிப்பு, பி.எட். தேர்ச்சி.

3.வேலையின் பெயர்: Miscellaneous Category Teachers
காலியிடங்கள்: 564
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்கவேண்டும்
சம்பளம்: ரூ.44,900 -  ரூ.1,42,400
கல்வித்தகுதி:  Music/Art/PET/Librariyan பாடப்பிரிவை முடித்திருக்க வேண்டும்.

Music: Music பாடப்பிரிவில் இளநிலை படிப்புடன் பி.எட். பட்டம்
Art: Drawing, Painting/ Fine Arts பாடப்பிரிவில் முதுகலை பட்டம்
PET: Physical Education பாடப்பிரிவில் இளநிலை பட்டம்
Librariyan: Library Science பாடப்பிரிவில் இளநிலை பட்டம்

அதேபோல Female Staff Nurse, Catering Assistant, Legal Assistant ஆகிய பணிகளுக்கும் காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள: https://navodaya.gov.in/nvs/en/Recruitment/Notification-Vacancies/

தேர்வு முறை:
1. எழுத்துத் தேர்வு / ஆன்லைன் எழுத்துத் தேர்வு 
2. நேர்முகத் தேர்வு 
தேர்வு நடைபெறும் நாள்: 05.09.19 முதல் 10.09.2019 வரை

எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் மூலம் https://navodaya.gov.in/nvs/en/Recruitment/Fill-up-online-application/ என்ற இணைய முகவரியைக் க்ளிக் செய்து அதில் கூறப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,200. ஆன்லைன் மூலமாக மட்டுமே பணத்தைச் செலுத்த முடியும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 09.08.19

-க.சே.ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x