நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சமாளிக்க மத்திய அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சமாளிக்க மத்திய அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை
Updated on
1 min read

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த மூத்த மத்திய அமைச்சர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

வரும் 21-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. இதில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா, வியாபம் ஊழல், மத்திய அமைச்சர் சுஷ்மா, லலித் மோடிக்கு உதவியது, ஜாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசை திணறடிக்க எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சதானந்த கவுடா, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் உள்ளிட்ட அமைச்சர்கள், அமைச்சரவை மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர்.

மாநிலங்களவையில் நிலுவை யாக உள்ள 4 மசோதாக்களை நிறைவேற்றுவது, புதிதாக 11 மசோதாக்களை அறி முகப்படுத்துவது, எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளை எதிர்கொள்வது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in