Published : 16 Jul 2019 12:12 PM
Last Updated : 16 Jul 2019 12:12 PM

பாஜக அமைச்சருடன் நாடாளுமன்றம் வருகைதந்த சமாஜ்வாதி எம்.பி.,: ராஜினாமா செய்த மறுநாளே மாற்றம்

உத்தரப் பிரதேச பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. நீரஜ் சேகர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவைக்கு பாஜக அமைச்சருடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் மகன் தான் இந்த நீரஜ் சேகர். இவர் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் ஏற்றுக் கொண்டார். 

பதவி விலகிய நீரஜ் சேகர் பாஜகவில் இணையவுள்ளதாகவும் அவர் மீண்டும் பாஜக சார்பில் உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடாளுமன்றத்துக்கு  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் வருகை தந்தார் நீரஜ் சேகர். இதனால், அவர் பாஜகவில் இணையலாம் என யூக அடிப்படையில் பேசப்பட்டது உறுதியாகியுள்ளது.
மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சிக்கு 10 எம்.பி.க்கள் இருந்தனர். நீரஜ் சேகர் ராஜினாமாவால் அக்கட்சியின் பலம் குறைந்துள்ளது.

ஏற்கெனவே கர்நாடகா, கோவா காங்கிரஸ் பிரமுகர்கள் பாஜகவுக்கு அணி மாறிவருகின்றனர். தற்போது உ.பி.யிலும் அந்த கணக்கை துவக்கி வைத்திருக்கிறார் நீரஜ் சேகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x