

புதுடெல்லி
உத்தர பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகர். இவர் முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் மகன் ஆவார். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவராக செயல்பட்டு வந்தார்.
இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினா மாவை மாநிலங்களவைத் தலை வர் வெங்கய்ய நாயுடு நேற்று ஏற்றுக் கொண்டார்.
பதவி விலகிய நீரஜ் சேகர் பாஜகவில் இணைய உள்ள தாகவும் பாஜக தரப்பில் அவர் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பலம் குறைந்தது
மாநிலங்களவையில் சமாஜ் வாதிக்கு 10 எம்.பி.க்கள் இருந் தனர். நீரஜ் குமாரின் ராஜினா மாவால் சமாஜ்வாதி எம்.பி.க் களின் எண்ணிக்கை 9 ஆகக் குறைந்துள்ளது.
கர்நாடகா, கோவாவில் காங் கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந் துள்ளனர். அந்த வரிசையில் சமாஜ்வாதி மூத்த தலைவர் நீரஜ் சேகரும் பாஜகவுக்கு அணி மாறியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.