

நாட்டின் வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அசாம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, அசாமில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், அம்மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ள நீர் அங்குள்ள கிராமங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் புகுந்துள்ளதால் 26.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மழை நீர், வெள்ளம் போல சாலைகளில் ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தீஸ்பூர், குவாஹாட்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள் ளது. இதனால், மக்கள் கடும் சிரமத் துக்கு உள்ளாகி வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களுக்கு தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழு வதும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.
பக்சா மாவட்டத்தில் உள்ள பாலிபூர் கிராமத்தில் இருந்து நேற்று மட்டும் 150 பேர் வெளி யேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அசாம் வெள்ளத்துக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இதனிடையே, அசாமின் கஞ்சன் ஜுரி பகுதியில் உள்ள காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்கா வெள்ளத் தில் மூழ்கியுள்ளது. இதனால் அங்குள்ள விலங்குகள் மேடான இடங்களுக்கு கொண்டு செல்லப் பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், திரிபுராவிலும் கன மழையால் பெரும்பாலான பகுதி களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக் கப்பட்டுள்ளனர்.
பிஹாரில் பெய்து வரும் கன மழையால் 1 லட்சத்துக்கும் மேற் பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.