

கர்நாடக முதல்வர் குமாரசாமி பெரும்பான்மை இழந்துவிட்டதால், பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடியூரப்பா பெங் களூருவில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் ஆளும் காங்கி ரஸ், மஜதவை சேர்ந்த 16 எம்எல் ஏக்கள் தங்கள் பதவியை ராஜி னாமா செய்துள்ளனர். குமாரசாமி அரசை ஆதரித்த 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் தங்களது ஆத ரவை திரும்ப பெற்று, பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் பாஜகவின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசின் பலம் 100-க்கு கீழே குறைந்து, பெரும்பான்மையை இழந்து விட்டது.
எனவே, குமாரசாமி உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால், தார்மீக ரீதியாக அவர் பதவி விலக வேண்டும். அவர் ராஜினாமா செய்யாத பட்சத்தில் திங்கள்கிழமை (இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் காலதாமதம் செய்யக்கூடாது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் குமார சாமிக்கு எதிராக வாக்களித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவ குமார் சொல்கிறார்.
இது உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிரான பேச்சு. அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அதிருப்தி எம்எல்ஏக்களை பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்ய கூடாது என தெரிவித்துள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்எல்ஏக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக் கலாம். காங்கிரஸார் எவ்வளவு முயற்சித்தாலும் அதிருப்தி எம்எல் ஏக்கள் திரும்பி வர மாட்டார்கள். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைவதற்கு பதிலாக, குமாரசாமி தற்போது கவுரமாக ராஜினாமா செய்துவிடலாம். நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொள்வது குறித்து எங்களது எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். சித்தராமையா சொல்வது போல் எங்களுக்குள் எந்த கறுப்பு ஆடும் இல்லை'' என்றார்.