காஷ்மீர் பண்டிட்களுக்கு தனி நகரங்கள் அமைப்பது காலத்தின் கட்டாயம்: ஆளுநர் சத்யபால் மாலிக் விளக்கம்

காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் | கோப்புப் படம்
காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் | கோப்புப் படம்
Updated on
1 min read

காஷ்மீர் பண்டிட்களுக்கு தனி நகரங்கள் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜம்முவில் செய்தி யாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

காஷ்மீரின் பூர்வ குடிமக் களாக விளங்கியவர்கள் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர். வன்முறை மற்றும் அடக்குமுறையை பயன் படுத்தி தீவிரவாத சக்திகள் அவர் களை இங்கிருந்து வெளியேற்றின. இதன் காரணமாக, சொந்த நாட்டி லேயே அகதிகளை போல காஷ் மீர் பண்டிட்கள் வாழ்ந்து வரு கின்றனர். அவர்களை காஷ் மீரிலேயே மீள் குடியேற்றம் செய்ய வேண்டியது அரசின் கடமை யாகும். இதனை கொள்கை முடி வாகவே அரசு அறிவித்துள்ளது.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. காஷ்மீர் பண்டிட்களை குடியமர்த் துவதற்காக பிரத்யேக நகரங்களும் அமைக்கப்படவுள்ளன. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு அச்சுறுத்தல்

இதனை எதிர்க்கட்சிகள் விமர் சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதனை அவர் கள் வேண்டாம் எனக் கூறுவார் களா? உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். அந்த வகையில்தான், காஷ்மீர் பண்டிட்களுக்காக தனி நகரங்கள் அமைக்கப்படுகின்றன. இது, அரசின் விருப்பம் அல்ல. காலத்தின் கட்டாயம். இவ்வாறு சத்யபால் மாலிக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in