Last Updated : 11 Jul, 2015 09:54 AM

 

Published : 11 Jul 2015 09:54 AM
Last Updated : 11 Jul 2015 09:54 AM

முறைகேடுகளை தடுக்க ம.பி. அரசு நடவடிக்கை: ‘வியாபம்’ தேர்வுகளை இனிமேல் ஆன்லைனில் நடத்த முடிவு - புதிய மொபைல் ஆப் அறிமுகம்

மத்தியப் பிரதேசத்தில் தொழில் கல்வி வாரியத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் கணினி மயமாக்கம் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் மொபைல் ஆப் ஒன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பணி நியமனங்கள், கல்லூரி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளை தொழில்கல்வி வாரியம் (வியாபம்) மேற்கொள்கிறது. இதில் மிகப்பெரிய மோசடி நடந்த தும், இதில் சம்பந்தப்பட்ட 47 பேர் மர்ம மரணம் அடைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனால் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி முற்றி உள்ளது.

இந்நிலையில், வியாபம் நடத்தும் அனைத்து தேர்வுகளையும் கணினி மயமாக்க அரசு முடிவெடுத் துள்ளது.

மாநில தொழில்நுட்பம் மற்றும் உயர்க் கல்வித் துறை அமைச்சர் உமாசங்கர் குப்தா நேற்று முன்தினம் செய்தியாளர் களிடம் கூறும்போது, “வியாபத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இனி வெளிப்படையாக இருக்கும். அதற்கேற்ப கணினிமயமாக்கம் செய்யப்படும்” என்றார்.

வியாபம் தேர்வு நடை முறைகளை வெளிப்படையாக்க, புதிய மொபைல் ஆப் உருவாக் கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் குப்தா அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் வியாபம் தலைவர் மதன்மோகன் உபாத்யாய உட்பட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் கூறும்போது, “ஆன்லைன் மூலம் வியாபம் தேர்வு நடத்துவதற்கு வசதியாக புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த மொபைல் ஆப், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த பிரச்சினையும் இன்றி ஆன்லைனில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதலாம்” என்றார்.

வியாபம் தலைவர் உபாத்யாய கூறும்போது, “இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவப் படிப்புகளுக் கான நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி நடத்தப்படும். இதுவே ஆன்லைனில் வியாபம் நடத்தவுள்ள முதல் தேர்வு. விண் ணப்பங்கள், தேர்வு நடைபெறும் தேதி, மாதிரி வினா-விடை உட்பட எல்லா விவரங்களும் இந்த புதிய ஆப் மூலம் பெற முடியும்.

மேலும் பல்வேறு பாடத்திட்டங் களில் 2015-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வியாபம் மூலம் நடைபெறும். அதேபோல் மாநிலத்தில் உள்ள 60, 700 காலிப் பணியிடங்களுக்கான நியமனமும் வியாபம் மூலம் நடைபெற உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x