அரசு விளம்பரம்: டெல்லிக்கு எதிரான மனு நிராகரிப்பு

அரசு விளம்பரம்: டெல்லிக்கு எதிரான மனு நிராகரிப்பு
Updated on
1 min read

டெல்லி மாநில அரசுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

அரசு வெளியிடும் விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். தனிநபர் வழிபாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தது.

அரசு விளம்பரங்கள் வெளியிடுவதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. இந்த நெறிமுறைகளை டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீறுவதாகக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும், டெல்லி அரசு, விளம்பரங்களுக்கான தொகையை ரூ.30 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு தீர்வுபெறுவதற்கான வேறு வழிமுறைகள் உள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளை மீறி தாக்கல் செய்யப்படும் தனிப்பட்ட மனுக்களை ஊக்குவிப்பதில்லை என உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in