Published : 02 May 2014 09:00 AM
Last Updated : 02 May 2014 09:00 AM

அட்சய திருதியை நாளில் அதிகரிக்கும் குழந்தை திருமணம்: ராஜஸ்தானில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் அட்சய திருதியை நாளில் அதிக அளவில் குழந்தைகள் திருமணம் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதனைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பன்டி, கோடா, பரன், ஜலவார் ஆகிய மாவட்டங்களில் உள்ள குர்ஜார், மீனா, மாலி, குமாவத், பார்வா ஆகிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அட்சய திருதியை நாளன்று தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் அப்பகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தவிர குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களில் போலீஸார் கண்காணிப்பு மையங்களை அமைத்து, இப்போதிருந்தே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்கள் காவல் துறை உயரதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகளுடன் சிறப்பு கூட்டத்தை நடத்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

பஞ்சாயத்து அமைப்புகளு டன் இணைந்து கிராமப் பகுதிகளில் கூடுதல் முக்கியத்துவத்துடன் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் இப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவயதிலேயே திருமணம் செய்வதால் குழந்தைகளுக்கும், சமூகத்துக்கும் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.

பன்டி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்ய முயற்சித்தது தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x