யாகூப் மேமன் தூக்கு தண்டனையும், திகைப்பும்..

யாகூப் மேமன் தூக்கு தண்டனையும், திகைப்பும்..
Updated on
2 min read

தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு இம்மாத இறுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இவர் இதே வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி டைகர் மேமனின் தம்பி ஆவார்.

20 ஆண்டுகளாக எனக்கு தெரிந்த நீதிபதி பி.டி.கோதி அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவர் பணியில் இருந்த தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்கும் நிருபராக நான் இருந்துள்ளேன்.

யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது அவரது வழக்கறிஞர் சதீஸ் கன்சி உள்பட சிலருக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டு களுக்கு முன்பு இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “பாகிஸ் தானுக்கு சென்று யாகூப் பயிற்சி எடுக்கவும் இல்லை. வெடிகுண்டு களை அவர் வைக்கவும் இல்லை. மேலும் வெடிபொருட்களை கொண்டு வரும் வேலையிலும் அவர் ஈடுபடவில்லை. பொதுவாக மரணம் விளைவிக்கும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தான் தூக்கு தண்டனை விதிக்கப் படும். ஆனால் யாகூப் மேமன் மீது அதுபோன்ற குற்றங்கள் இல்லை” என்று கூறியிருந்தார்.

யாகூப் மீதான வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்த உஜ்வல் நிகம், யாகூப் மேமன் குறித்து சில கருத்துகளை கூறியுள்ளார். அதில், “முதல்முறை யாக யாகூப் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டபோது அவரை பார்த்தேன். மிகவும் அமைதியாக வும், பிறருடன் அதிகம் பேசுவதை தவிர்க்கும் இயல்பு உடையவராக அவரைப்பற்றி எனக்கு தோன்றி யது. பட்டய கணக்காளரான அவர் தனக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களையும், நீதிமன்ற வாதங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தார். தனது வழக்கறிஞருடன் மட்டும் தான் பேசினார். ஒரே ஒருமுறை மட்டும் நீதிமன்றத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண் டார். 1995-96-ம் ஆண்டு காலகட்டத் தில் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் யாகூப் மேமனுக்கு வழங்கப்படவில்லை. அப்போதுதான அவர் உணர்ச்சி வசப்பட்டு கத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.

யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது என்பதற்கு ஆதரவாக எனது நண்பர் ஆர்.ஜெகன்நாதன் ஃபஸ்ட்போஸ்ட் இணையதளத்தில் எழுதியுள்ளார். அதில் “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை யில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட 3 பேருக்கும் இன்னும் தூக்கு நிறைவேற்றப்படவில்லை. பஞ்சாப் முதல்வர் பேயந்த் சிங் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவரும் இன்னும் தூக்கிலிடப்படவில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“படுகொலைகள், தீவிரவாத குற்றச்சாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அரசியல் ஆதரவு இருந்தால் மத்திய, மாநில அரசுகள், சட்டம் அளித்த தண்டனையை நிறுத்தி வைக்க தீவிர முயற்சி எடுத்து அதில் வெற்றியும் பெறுகின்றன.

அதே நேரத்தில் இதற்கு முன்பு தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப், அப்சல் குரு விஷயத்திலும், இப் போது யாகூப் மேமன் விஷயத் திலும் எதுவும் நடக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு போது மான அரசியல் ஆதரவு இல்லை” என்றும் ஆர்.ஜெகன்நாதன் எழுதி யுள்ளார்.

நான் நிருபராக பணியில் சேர்ந்த புதிதில், மும்பை ஆர்தர் சாலை சிறைக்கு சென்றேன். அங்கு தான் மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பலரும் இருந்தனர். சிறைக்கு வெளியே பர்தா அணிந்த ஏராளமான பெண்கள் இருந்தனர்.

விசாரணைக் கைதியாக சிறையில் உள்ள தங்களது கணவர், மகன், சகோதரர்களுக்கு வீட்டில் இருந்து உணவு கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. அவர் களுக்கு ஆங்கிலத்தில் கோரிக்கை கடிதம் எழுத தெரியாததால் என்னிடம் கேட்டனர். நான் அவர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதிக் கொடுத்தேன்.

சிறிது நேரத்தில் சிறைக்காவலர் என்னிடம் வந்து, சிறை அதிகாரி என்னை பார்க்க வேண்டுமென்று கூறுவதாக உள்ளே அழைத்தார். நான் அவருடன் சென்றேன், அங்கு ஹர்மந்த் என்ற சிறை அதிகாரியை சந்திதேன். அப்போது நீ்ங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் உதவி கேட்டார்கள் நான் செய்தேன் என்று அமைதியாக பதிலளித்தேன். அப்போது, சிறையில் உள்ள சஞ்சய் தத்தை சந்திக்க விரும்புகிறீர்களா என்று அதிகாரி என்னிடம் கேட்டார். நான் ஆமாம் என்றேன். அதன் பிறகு மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பலரை சிறையிலும், நீதிமன்றத் திலும் நான் பலமுறை சந்தித்துள்ளேன்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி பின்பு கொலை செய்யப்பட்ட முகமது ஜிந்திரனை யும் சந்தித்துள்ளேன். இப்போது யாகூப் தூக்கிலிடப்பட இருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in