மோடியின் பதவியேற்பு விழாவில் தொழில் அதிபர்கள் பங்கேற்பு

மோடியின் பதவியேற்பு விழாவில் தொழில் அதிபர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

பிரதமர் பதவி ஏற்பு விழாவில் இந்திய தொழில் துறையின் முக்கியமான நபர்கள் கலந்துகொண்டனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி மற்றும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் அவரது சகோதரரும் அனில் திருபாய் அம்பானி குழுமதலைவருமான அனில் அவரது குடும்பம் மற்றும் திருபாய் அம்பானியின் மனைவி கோகிலா பென் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி அவரது மனைவி, ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் அசோக் ஹிந்துஜா, எஸ்ஸார் தலைவர் சஷி ரூயா அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரசாந்த் ரூயா ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் அவரது சகோதரர்கள், டி.எல்.எஃப். துணைத்தலைவர் ராஜிவ் சிங், ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் முன்ஞால், சுஸ்லான் குழும தலைவர் துல்சி டாண்டி, விடீயோகான் தலைவர் ராஜ்குமார் தூத், ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல், ஏர் ஏசியாவின் மித்து சாண்டில்யா, யெஸ் வங்கி மற்றும் அசோசேம் அமைப்பின் தலைவர் ரானா கபூர், நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகர் ஆகியோரும் கலந்துகொண்டார்கள். ரத்தன் டாடா, டாடா குழுமதலைவர் சைரஸ் மிஸ்ட்ரி, ஆனந்த மஹிந்திரா, விஜய்மல்லையா, தீபக் பரேக் ஆகியோர் விழாவில் கலந்துக்கொள்ளாத முக்கியமான தொழில்துறை பிரபலங்கள் ஆவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in