Published : 05 May 2014 09:09 AM
Last Updated : 05 May 2014 09:09 AM

பெங்களூர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளிடம் தமிழக சிபிசிஐடி போலீஸார் விசாரணை

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய குற்றவா ளிகளிடம் தமிழக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் ஆந்திரா வைச் சேர்ந்த ஸ்வாதி பலியானார். இது தொடர்பாக விசாரிக்க தமிழக சிபிசிஐடி எஸ்.பி. அன்பு தலைமையில் 30 போலீஸார் பெங்களூரில் முகாமிட் டுள்ளனர். பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் தமிழக போலீஸார் பார்வையிட்டனர். குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் இரவு 12.05 மணிக்கு கிளம்பியதால் இரவில் குறைந்த ஒளியில் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவை விசாரணைக்கு உதவவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் ரயில் நின்றுசென்ற பெங்களூர் கண்டோன்மெண்ட், பெங்களூர் கிழக்கு, கிருஷ்ண ராஜபுரம், பங்காருபேட்டை ரயில் நிலையங்களில் சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். அந்த ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் போலீஸார் ஏமாற்றம் அடைந்தனர்.

ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை

குவாஹாட்டி எக்ஸ்பிரஸில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார், டிக்கெட் பரிசோதகர்கள், ரயிலை சுத்தம் செய்தவர்கள், ரயிலில் டீ, காபி விற்றவர்கள் உள்ளிட்டோரை பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்துக்கு அழைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது எஸ் 4, எஸ் 5 பெட்டிகளில் சீட்டுகளுக்கு இடையே ஏதேனும் பொருள் கிடந்ததை பார்த்தீர்களா என்றும் பயணிகள் பட்டியலில் பெயரில்லாத எத்தனை பேரை இந்த பெட்டிகளில் பயணிக்க அனுமதித்தீர்கள் என்றும் சாதாரண டிக்கெட் வாங்கிவிட்டு முன்பதிவு பெட்டியில் எத்தனை பயணிகள் பயணித்தார்கள் என்றும் டிக்கெட் பரிசோதகர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரில் 2008, 2013ம் ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு சம்பவங்களில் தொடர் புடைய குற்றவாளிகளிடம் தமிழக சிபிசிஐடி போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாகவே தெரிகிறது. இந்த வழக்கு குற்றவாளிகளிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x