

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலங்கானா என இரண் டாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, ஹைதராபாத் 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகராக விளங்கும் என்றும் அதன் பிறகு தெலங்கானா மாநில தலைநகராகிவிடும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதிய ஆந்திர மாநிலத்துக்கு கிருஷ்ணா நதியின் இரு புறமும் அழகிய தலைநகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய தலைநகருக்கு ‘அமராவதி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகள் வரும் விஜயதசமி முதல் தொடங்க உள்ளது. 8 ஆயிரம் ஏக்கரில் தலைநகரம் அமைய உள்ளது.
இதற்கான பணிகள் சிங்கப்பூர் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மாதிரி படங்கள் சிங்கப்பூரில் இருந்து ஆந்திர அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் 4 படங்களை ஆந்திர அரசு வெளியிட்டது. இவை மெட்ரோ ரயில், வானளாவிய கட்டிடங்கள் என பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது.