கர்நாடகாவில் மழை குறைந்தது: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது குறைப்பு - மேட்டூர் அணை நிரம்புவதில் சிக்கல்

கர்நாடகாவில் மழை குறைந்தது: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது குறைப்பு - மேட்டூர் அணை நிரம்புவதில் சிக்கல்
Updated on
1 min read

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்த தன் எதிரொலியாக கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து நீர்வெளி யேற்றம் குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தலைக் காவிரி, குடகு, பாகமண்டலா, மடிக் கேரி உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் கன மழை பெய்தது. இதனால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணை வேகமாக நிரம்பியது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக மழைப் பொழிவு கணிசமாக குறைந்ததால், கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த‌து.

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 19 ஆயிரத்து 349 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இது நேற்று, 9 ஆயிரத்து 209 கன அடியாக குறைந் த‌து. இதனால் அணையில் இருந்து பாசனத்துக்காக‌ திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 354 கன அடியாக குறைக்கப்பட்டது. எனவே கர்நாடக மற்றும் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கபினியிலும் குறைந்தது

இதே போல கேரள மாநிலம் வயநாட்டை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பருவ மழை பெய்தது. இதனால் கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த 28-ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வந்த நீர் முழுவதும் தமிழகத்துக்கு திறக்கப் பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்த‌து.

ஆனால் தற்போது வயநாடு பகுதியில் பருவ மழை குறைந்துள்ள தால் கபினி அணைக்கு நீர்வரத்து கணிசமாக‌ குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்ததால், 9 ஆயிரத்து 224 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது. இதனால் கபினி அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக குறைந்துள்ளது.

கர்நாட‌கத்தில் மழை குறைந்ததன் எதிரொலியாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து நீர்வெளி யேற்றம் முற்றிலுமாக குறைக்கப் பட்டுள்ளது.

இதனால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு பன்மடங்கு குறைந் துள்ளதால், மேட்டூர் அணை நிரம்பு வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே குறுவை சாகுபடிக்கு நீரை எதிர் பார்த்திருக்கும் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in